Posts

2023-யில் அதிக எதிர்பார்ப்பில் வெளிவரவுள்ள தமிழ் படங்கள்

2023 ஆம் வருடம் முதல் இரண்டு மாதங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடைய சில படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. குறிப்பாக விஜயின் வாரிசு அஜித்தின் துணிவு ஒரே நாளில் வெளியாகி  இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீசில் மாபெரும் வெற்றி அடைந்தன.பிப்ரவரி மாதத்தில் நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் 100 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படங்கள் தவிர்த்து இந்த வருடம் தமிழில் அதிக எதிர்பார்ப்பில் வெளிவர உள்ள திரைப்படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.   பொன்னியின் செல்வன் பாகம் 2  மணிரெத்தினம் அவர்களுடைய கனவு படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் நல் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் எடிட்டிங் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் பாகம்
Recent posts